இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது தானல்ல என்றும், அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் சதானந்த கவுடா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. தனிப்பட்ட நலன்களுக்காக, அப்பழுக்கற்ற எனது பிம்பத்தை சீர்குலைக்கும் வகையில் எனது எதிரிகளால் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளேன். தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.