புத்தாண்டு தினத்தன்று, உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 60,000 குழந்தைகள் பிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஜனவரி 1ஆம் தேதி, புத்தாண்டு தினத்தன்று மட்டும் உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 60,000 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்தது. மொத்தத்தில், 2021 ஆம் ஆண்டில் 140 மில்லியன் (14 கோடி) குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பகுதியின் பிஜி நாட்டில் 2021 இன் முதல் குழந்தை பிறக்கும் அதே வேளையில், அமெரிக்கா கடைசி குழந்தையை வரவேற்கும். உலகளவில், புத்தாண்டின் முதல் நாளில் பிறப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 10 நாடுகளில் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது: இந்தியா (59,995), சீனா (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா ( 12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), பங்களாதேஷ் (9,236) மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (8,640) என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.