ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் சிவன் ஆலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவதும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று (01/03/2022) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் சிவபெருமானின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
6 மணி நேரத்தில் 23436 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிற்பத்தை அவர் வடிவமைத்துள்ளார். இதற்கு சுமார் 12 டன் மணலை அவர் பயன்படுத்தியுள்ளார். 18 அடி அகலம் மற்றும் 9 அடி உயரத்தில் இந்த சிலையை அவர் வடிவமைத்துள்ளார்.
முதல் முறையாக மணல் சிற்ப வடிவமைப்பிற்கு ருத்ராட்சங்களை பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலையை அவரது சொந்த மாநிலமான ஓடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் அமைத்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.