”100 வயதில் மோட்டார் ரேசிங்..102 வயதில் ஸ்கை டைவிங்”- மிரளவைக்கும் மூதாட்டியின் சாகசங்கள்!

பிரிட்டனை சேர்ந்த மூதாட்டிய ஒருவர், தனது 102 வயதில், ஸ்கைடைவிங் செய்து அசத்தியுள்ளது, கேட்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன்முகநூல்
Published on

பிரிட்டனை சேர்ந்த மூதாட்டிய ஒருவர், தனது 102 வயதில், ஸ்கைடைவிங் செய்து அசத்தியுள்ளது, கேட்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்தவர் 102 வயதான மானெட் பெய்லி. மானெட் பெய்லி இப்பொழுதுதான் மூதாட்டி. ஆனால், முன்னொரு காலத்தில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீராங்கனையாகவும், முன்னாள் மகளிர் ராயல் கடற்படை உறுப்பினருமாக திகழ்ந்து வந்தவர்.

அப்பொழுது துவங்கிய இவரது விறுவிறுப்பான வாழ்க்கைப்பயணம் தற்போது வரை நின்றபாடில்லை. இந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு, சாதனை ஒன்றினை செய்திருக்கிறார்.

பிரிட்டன்
ஒலிம்பிக் | செல்ஃபி எடுத்த வடகொரியா வீரர்கள்! தண்டனைக்கு உள்ளாக்க வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல்!

சமீபத்தில், 85 வயது முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்ததை செய்தியின் மூலம் அறிந்த மானெட், ’என்னால் ஏன் இப்படி செய்யமுடியாது?’ என்று தனக்குள் கேள்வி எழுப்ப.. கேள்விக்கு விடை வந்தது இவரின் 102ஆவது பிறந்தநாளில்... இதன்படி, இளம் தலைமுறைகளே ஸ்கை டைவிங் செய்வதற்கு மிகவும், அச்சும் நிலையில், தனது 102 ஆவது வயதில், விமானத்திலிருந்து ஸ்கைடைவிங் செய்து அசத்தியுள்ளார் மானெட்..

இதன் மூலம், 2017 ஆம் ஆண்டு 101 வயதில் ஸ்கை டைவிங் செய்த வெர்டுன் ஹேஸ் என்பவரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதன் மூலம், பிரிட்டனிலேயே 102 வயதில் ஸ்டை டைவிங் செய்யும் மிக வயதானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில், 2100 மீட்டர்(6,900 அடி) உயரத்திலிருந்து குதித்து, ஒரு உதவியாளருடன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பிரிட்டன்
30 வருடங்களில் இல்லாத துயரம்.. 4.8 மில்லியன் மக்கள் பாதிப்பு.. வெள்ளத்தால் அவதியுறும் வங்கதேசம்!

இந்நிலையில், இது குறித்து அவர், தெரிவிக்கையில், “நான் மிகவும் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருப்பதை மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். எனவே, இதற்காகவாவது நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னால் இதை வீணாக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இப்படி, இவர் செய்வது முதல் முறை அல்ல...மானெட் தனது 100 ஆவது பிறந்தநாளில், ஃபெராரியில் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை மணிக்கு 210 கிலோமீட்டர் (மணிக்கு 130 மைல்) வேகத்தில் ஓட்டி அசத்தியுள்ளார் என்பது கூடுதலான செய்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com