1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு

1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு
1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு
Published on


கொரோனா பரவல் காரணமாக ஓலா நிறுவனம் 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.


உலக அளவில் மக்களின் வாகனப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஓலா நிறுவனம். இந்நிறுவனம் தற்போது
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் மிகப் பெரிய நஷ்டத்தினை சந்திருப்பதாகக் கூறியுள்ளது. ஆகவே முதற்கட்டமாக 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து ஓலா நிறுவனத்தின் சார்பில் கடிதம் ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் “ கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஓலா நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஆகையால் ஓலா நிறுவனத்திலிருந்து இந்த வார இறுதிக்குள் 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. முதற்கட்டமாகப் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஓலா வாகன பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கின்றனர். இந்தப் பணிநீக்கமானது கொரோனா தொற்றால் உருவான பொருளாதார சீர்குலைவால் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பணியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு அறிவிப்பு காலத்திற்கான 3 மாத சம்பளம் வழங்கப்படும். மேலும் அவர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகை, விபத்துக் காப்பீட்டுத் தொகை மற்றும் பணியாளர்களின் பெற்றோருக்கான காப்பீட்டுத் தொகை (2 லட்சம் வரை) உள்ளிட்டவற்றை டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடர முடியும்.

குத்தகை முறையில் வீடுகளில் வசிக்கும் 30,000 பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையாக மாதம் 25,000 ரூபாய் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் பணியாளர்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து வெளியே வர, நிறுவனத்தின் சார்பில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com