தொடர்ந்து தீ விபத்துக்குள்ளாகும் இ-ஸ்கூட்டர்கள் - 'ஓலா' எடுத்த அதிரடி முடிவு!
நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவனத்தின் 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீப நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இது குறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''புனேயில் மார்ச் 26 அன்று நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிப்பிட்ட தொகுப்பில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட ஸ்கூட்டர்களில் விரிவான பாதிப்பு மற்றும் முழு சோதனையை நடத்துவோம். அதன்படி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் மின்சார இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுகிறது. இந்த ஸ்கூட்டர்கள் எங்கள் சேவை பொறியாளர்களால் ஆய்வு செய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
ஓலா மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களான, ஒகினாவா ஆட்டோடெக் 3,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது. அதே போல, பியூர் இவி நிறுவனம் 2,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து ஒருவர் உயிரிழப்பு - தொடரும் விபத்தால் பீதி