ஆடி கார் மீது லேசாக மோதிய ஓலா கேப் கார்| டிரைவரை தூக்கிப் போட்டு தாக்கிய கொடூரம் #ViralVideo

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை
மும்பைஎக்ஸ் தளம்
Published on

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி இரவு 11:20 மணியளவில், மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டடத்தின் நுழைவாயிலில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியாகும் அந்த வீடியோவில், ’முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த ஓலா டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள் இறங்கிவந்து சேதத்தைப் பார்வையிடுகின்றனர். பின்னர், ஆடி காரின் உரிமையாளர் ஓலா காரின் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையும் படிக்க: ”கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்; கேள்விக்குப் பதிலளியுங்கள்” - மம்தா பானர்ஜிக்கு பாஜக பதில்!

மும்பை
பெண்களை இழிவுபடுத்தும் ஆடி கார் விளம்பரம்: புதிய சர்ச்சை!

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஆடி கார் உரிமையாளரின் பெயர் ரிஷப் சக்ரவர்த்தி எனவும் அவருடன் அவரது மனைவி அந்தரா கோஷும் மேலும் பெண்ணும் பயணித்ததும் தெரிய வந்துள்ளது.

ஆடி கார் உரிமையாளர் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ள ஓலா டிரைவரின் பெயர் ரிஷப் கயாமுதீன் எனத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடி கார் உரிமையாளர் ரிஷப் சக்ரவர்த்தி தம்பதியினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வைரலாகி வரும் இந்த வீடியோவுக்குப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: விவசாய போராட்டம்: சர்ச்சை கருத்து|கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்த ராபர்ட் வதோரா!

மும்பை
ஆடி கார் நிறுவனத்தின் நிர்வாகி கைது..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com