பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையில் தலையிடும் எண்ணம் இல்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் முறை அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 30 காசு அதிகரித்துள்ளது அரசிற்கு எதிரான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையில் தலையிடும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு தற்காலிகமானதே என்றும் இது தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுவதாகவும் அமைச்சர் பிரதான் விளக்கம் அளித்தார்.