அவ்வளவு பாசமா? - இறந்த நபருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த கிராம மக்கள்

அவ்வளவு பாசமா? - இறந்த நபருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த கிராம மக்கள்
அவ்வளவு பாசமா? - இறந்த நபருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த கிராம மக்கள்
Published on

கிராமத் தலைவர் தேர்தலில் இறந்த நபர் ஒருவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்து அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராம மக்கள்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ள கஜேரா கிராமத்தில் 1296 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு கிராமத் தலைவர் தேர்தல் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது. அதில் 1,043 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் ரவீந்திர தாகூர், சந்திரபான் அஹிர்வார் மற்றும் வினோத் சிங் ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே ஜூன் 22ஆம் தேதி தாகூர் மாரடைப்பால் உயிரிழந்தார். இருப்பினும், இதுகுறித்து அந்த கிராம மக்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் அவருடைய பெயரும் வாக்குச்சீட்டில் இடம்பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தாகூர் 512 வாக்குகளையும், அஹிர்வார் 257 வாக்குகளையும், வினோத் 153 வாக்குகளையும் பெற்றதில், தாகூர் அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தாகூர் மாரடைப்பால் மரித்துப்போன நிலையில் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அந்த கிராம மக்களும் தாகூர் மீதிருந்த பாசம் மற்றும் நம்பிக்கையால் அவருக்கே வாக்களித்து வெற்றியும் பெறவைத்துள்ளனர். 255 வாக்குகள் வித்தியாசத்தில் தாகூர் வெற்றி பெற்றுள்ளதால், இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி தீபக் ஆர்யா கூறுகையில், ‘’தேர்தல் நடப்பதற்கு குறைந்தது 72 மணிநேரத்திற்கு முன்பாக போட்டியாளர் இறந்தது குறித்து மக்கள் தகவல் தெரிவித்திருந்தால் கூட நாங்கள் கடைசி நேரத்தில் அவரது பெயரை நீக்கி புதிய வாக்குச்சீட்டை அச்சடித்திருப்போம். ஆனால் தற்போது மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னை ஓரிரு நாட்களில் முடித்து வைக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com