காவலர் தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து பெண் தேர்வர்களின் தாலியை அதிகாரிகள் கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. முறைகேடுகளை தடுக்க பலத்த சோதனைகளுக்குப் பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஃபிரோஸாபாத்தைச் சேர்ந்த புதிதாக திருமணமான பிரின்சஸ் மற்றும் ஆர்த்தி ஆகியோர் தேர்வு எழுத வந்தனர். அப்போது சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் ஆர்த்தியின் தாலியைக் கழற்றச் செய்தனர். இதில் வேதனையடைந்த தம்பதி தேர்வு எழுதிய பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதற்கு அம்மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா முறைகேடுகளைத் தவிர்க்கவே தேர்வில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.