ஆம்புலன்ஸ் வர முடியாத சாலை: நோயாளிகளை தோளில் சுமக்கும் அவலம்

ஆம்புலன்ஸ் வர முடியாத சாலை: நோயாளிகளை தோளில் சுமக்கும் அவலம்
ஆம்புலன்ஸ் வர முடியாத சாலை: நோயாளிகளை தோளில் சுமக்கும் அவலம்
Published on

ஆம்புலன்ஸ் வர முடியாத அளவுக்கு சாலை இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் தோளில் சுமந்துசென்ற சம்பவம் ஓடிஷாவில் நடந்துள்ளது. 

மல்காங்கிரி மாவட்டத்தின் கானகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தபோதிலும் மோசமான சாலை காரணமாக ஆம்புலன்ஸ் வர இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை கயிற்றில் கட்டப்பட்ட தட்டில் அமரவைத்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊருக்கு தோளில் சுமந்துசென்றனர். அங்கு 2 மணிநேரம் காத்திருந்தபின்பே ஆம்புலன்ஸ் வாகனம் வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச்சென்றதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com