கடந்த ஜூன் இரண்டாம் தேதி ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியதில் பெருத்த சேதம் ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கடைசியாக 289 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராம் என்பவர் ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருடைய உயிரிழப்பை அடுத்து இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.