ஒடிசாவில் மாற்றுத்திறனாளி இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய மூடநம்பிக்கை நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் உடல்குறைபாடு சரியாகவில்லை. அந்த இளைஞரின் தாயார் இதுதொடர்பாக அப்பகுதியில் இருந்த கோவில் சாமியார் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அந்த சாமியார், மாற்றுத்திறனாளி இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டினால், அவரது உடல்குறைபாடு குணமாகும் என்று கூறியுள்ளார். அவரது ஆலோசனைப்படி இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த கோவிலுக்கு, அவரது தாயார் அழைத்து வந்துள்ளார்.
அங்கு தரையில் தீமூட்டி இளைஞரை தலைகீழாக கட்டி தொங்க விட்டுள்ளனர். இதில் தீ அவரது உடலில் பரவி பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான புகாரில் அந்த சாமியார் கைது செய்யப்பட்டார். மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நவீன காலத்தில் இதுபோன்ற செயல் மூட நம்பிக்கைகளின் உச்சமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளன.