ஒடிசாவில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார்.
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பீஜபூர் மற்றும் ஹின்ஜிலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று 2 தொகுதிகளில் பீஜபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹின்ஜிலி தொகுதியின் எம்.எல்.ஏவாக மட்டும் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 19 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதி பாசு 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு பிறகு அதிக நாட்கள் முதலமைச்சராக நவீன் பட்நாயக் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.