ஒடிசா | ஓட்டுப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்திய பாஜக எம்.எல்.ஏ.. கைதுசெய்த போலீசார்!

ஓட்டுப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்திய வழக்கில், ஒடிசா பாஜக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசாந்த் ஜக்தேவ்
பிரசாந்த் ஜக்தேவ்ட்விட்டர்
Published on

நாடு முழுவதும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, பெகுனியா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், குர்தா சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரசாந்த் ஜக்தேவ் வரிசையில் காத்திருந்ததாகவும், அப்போது வாக்குப்பதிவு மந்தமாக நடப்பதாக கூறி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தாகவும், ஒருகட்டத்தில் அவர்களைத் தாக்கி வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிசிடிவி ஆதாராத்துடன் பிரசாந்த் ஜக்தேவ் மீது காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தப்பியோடிய பிரசாந்த்தை நேற்று கைது செய்தனர். அவர்மீது ஐபிசி மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவர், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்றும் தற்போது அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாலியல் புகார் | ”பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

பிரசாந்த் ஜக்தேவ்
மனு கொடுக்க வந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ: வீடியோ வைரல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com