பிரவதி பரிதா விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சருமான பிரவதி பரிதா, “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்” என்ற அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த மாதவிடாய் கால விடுமுறையை எடுத்துக்கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரளா, பீகார் மாநிலங்களில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ள நிலையில், மூன்றாவது மாநிலமாக ஒடிசாவும் மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது. முன்னதாக கென்யாவின் நைரோபியில் ஐக்கிய நாடுகளின் சிவில் சொசைட்டி மாநாடு இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கோரி, ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.