ஒடிசாவைச் சேர்ந்த ரஞ்சன் ஸ்வைன் என்ற 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக அபுதாபியில் பணிபுரிந்து வந்துள்ளார். தனது குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு இந்தியா வர விரும்பிய இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 18ம் தேதி அபுதாபியிலிருந்து இந்தியா வரும் விமானத்தில் ஏறி இருக்கிறார். ஆனால் இந்தியா வந்து சேர்ந்த பிறகு அவரை காணவில்லை.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர், அரபு எமிரேட்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதில் ரஞ்சன் 28 ம் தேதி இந்தியா செல்ல விமானத்தில் பயணித்ததும் அவர் இந்தியா வந்து இறங்கியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒடிசா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாருடன் சேர்த்து காவல்துறையிடம் ரஞ்சனின் குடும்பத்தார், “ரஞ்சன் அரபு நாடு செல்வதற்கு நாங்கள் கடன் வாங்கியிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு அடையாளாம் தெரியாத மர்ம நபரிடம் இருந்து ஒரு ஃபோன்கால் வந்தது.
அதில் பேசிய நபர்கள், எங்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காவிட்டால், ரஞ்சனை கொன்றுவிடுவதாக கூறினர். ரஞ்சன்தான் எங்கள் குடும்பத்துக்கு வாழ்வாதாரம். அதனால் அவரை கண்டுபிடித்து தரவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படியில் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ரஞ்சனை தேடி வருகிறது போலீஸ்.