இந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்திருப்பது அவர்கள் வருமானவரித் தாக்கல் செய்ததில் இருந்து தெரியவந்துள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டியதாக வருமானவரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய 2013- 14ஆம் நிதியாண்டில் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.
கோடிகளில் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே இருந்திருப்பதும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்திருக்கிறது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், சென்ற நிதியாண்டில் முதல்முறையாக 2 லட்சத்தை கடந்துள்ளது.