ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 2 அணு உலைகள் கட்டுமான திட்டத்தின் கீழ் இருப்பதாக தெரிவித்தார். மேலும் 2 அணு உலைகளுக்கு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
நியூட்ரினோ திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து முறையான அனுமதி பெற்றவுடன் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். அனுமதி பெறுவதற்காக நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு கூறினார். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சேகர் பாசு இத்தகைய தகவலை தெரிவித்துள்ளார்.