அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி
அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி
Published on

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவுற்றது.

ஒடிசா மாநிலம் பலாசூரில் உள்ள அப்துல்கலாம் தீவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது திட எரிபொருளால் செயல்படும் 1 டன் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து 2500 முதல் 3500 கி.மீ வரை சென்று தாக்கி அழிக்கக்கூடியது. அதிகபட்சமாக 4000 கி.மீ வரையிலான‌ தொலைவில் இருக்கும் இலக்கையும் துல்லியமாக தாக்கும் வகையில் அக்னி 4 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக அழிக்கும் இந்த ஏவுகணை, 200மீ நீளமும், 17 டன்கள் எடையும் கொண்டது. அக்னி 4 ஏவுகணை இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com