ஆக்சிஜன் செறிவூட்டி: ஒரு வாரத்தில் விலை நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்துக்கு உத்தரவு

ஆக்சிஜன் செறிவூட்டி: ஒரு வாரத்தில் விலை நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்துக்கு உத்தரவு

ஆக்சிஜன் செறிவூட்டி: ஒரு வாரத்தில் விலை நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்துக்கு உத்தரவு
Published on

கோவிட் 19 நோய்க் காரணமாக எழுந்த அசாதாரண சூழலை பயன்படுத்திக்கொண்டு, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலையை ஏற்றி, அவற்றை அதிகபட்ச சில்லரைக்கு விற்பனை செய்திருப்பதாகக் கூறி அதன் விலையை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அரசு செய்திருக்கும் முன்னெடுப்பு பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை :

"அரசுக்கு கிடைத்த தகவலின்படி, தற்போது விநியோகஸ்தர் அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலை, 198 சதவிகிதம் வரை அதிகமாக உள்ளது. இதை தடுக்க, ‘பொதுமக்கள் நலன் கருதி மருந்துவிலை கட்டுப்பாடு சட்டம் 2013 -ன் 19 வது பிரிவின்’ கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விநியோகஸ்தர் அளவிலான விலையின் மீது 70 சதவிகிதம் வரை வர்த்தக உச்ச வரம்பு விலையை தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயித்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரியில் புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள் மீதான வர்த்தக விலை உச்சவரம்பை அரசு நிர்ணயித்தது. அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வர்த்தக விலை உச்சவரம்பின் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட  அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை, உற்பத்தியாளர்கள்/ இறக்குமதியாளர்கள், 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இது தேசிய மருந்து விலை ஆணையத்தின் அறிவிப்பு.

மாற்றியமைக்கப்பட்ட இந்த அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை, தேசிய மருந்து விலை ஆணையம், அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவாக பொதுவெளியில் அறிவிக்கும். அவர்களைத் தொடர்ந்து சில்லரை விற்பனையாளர்கள், டீலர்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை விலை பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும்.

வர்த்தக விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்தபின், அதை பின்பற்றாத உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை 15 சதவிகித வடி மற்றும் 100 சதவிகித அபராதத்தை மருந்து விலை கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டும்.

கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க, மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை மாநில மருந்து விலை கட்டுப்பாட்டாளர்கள் கண்காணிக்க வேண்டும்

இந்த உத்தரவு 2021 நவம்பர் 30ம் தேதி வரை பொருந்தும். அதன்பின் மறுபரிசீலனைக்கு உட்பட்டது”என்று கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com