காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து சச்சின் பைலட் மற்றும் 18 காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார் என கட்சியை சேர்ந்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவற்றிலிருந்து பைலட் நீக்கப்பட்டு இருந்தாலும், அவர் கட்சியில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை. ஆகவே அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி விடுமா என காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தலைமையின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
பைலட் பதவியிலிருந்தது நீக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை அவரின் ஆதரவாளர்கள் தாமாகவே கட்சியை விட்டு வெளியேறலாம் எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து சச்சின் பைலட் மற்றும் 18 காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், இரு தினங்களுக்குள் விளக்கம் ஏதும் அளிக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பதவியை அவர்கள் நிராகரிப்பதாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்