"பண மதிப்பிழப்பால் வீடுகளின் விலை குறைந்தது" பிரதமர் மோடி

"பண மதிப்பிழப்பால் வீடுகளின் விலை குறைந்தது" பிரதமர் மோடி
"பண மதிப்பிழப்பால் வீடுகளின் விலை குறைந்தது" பிரதமர் மோடி
Published on

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்துள்ளதாவும், இதனால் இளைஞர்கள் மலிவு விலைக்கு வீடுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் பெரிய அளவில் பயன் ஒன்றும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில் சூரத் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது பேசிய அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்துள்ளதாக தெரிவித்தார். அவர் பேசும்போது, “ பொதுவாகவே பலரும் கருப்புப் பணங்களை ரியல் எஸ்டேட் துறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதற்கு செக் வைத்தது. இதன் காரணமாக தற்போது வீடுகளின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இளைஞர்கள் மலிவு விலையில் வீடு வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், உதான் திட்டத்தால் சாதாரண மனிதர்கள் கூட விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடிவதாக வறினார். அத்துடன் கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் 1.30 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாஜக என்னும் ஒற்றை கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாக்களிக்குமாறும் பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com