21 மாநிலங்களில் கோவாக்சின் போடவில்லை - எம்பி ரவிக்குமார் கேள்விக்கு சுகாதாரத்துறை பதில்

21 மாநிலங்களில் கோவாக்சின் போடவில்லை - எம்பி ரவிக்குமார் கேள்விக்கு சுகாதாரத்துறை பதில்
21 மாநிலங்களில் கோவாக்சின் போடவில்லை - எம்பி ரவிக்குமார் கேள்விக்கு சுகாதாரத்துறை பதில்
Published on

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், 21 மாநிலங்களில் ஒருவருக்குக் கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினிகுமார் சவுபே பதில் அளித்தார். அதில், இந்த விவரம் தெரியவந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 62 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 59 லட்சத்து 56 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்குக்கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com