Non-vegetarian prevention Day: நீங்க சைவமா? அசைவமா? நீளும் விவாதம்..உணவு சமநிலை குறித்து ஓர் பார்வை!

நவம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் இறைச்சி இல்லா தினமாக (Non-vegetarian prevention) நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக இறைச்சி இல்லா தினம்!
உலக இறைச்சி இல்லா தினம்!முகநூல்
Published on

நவம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் இறைச்சி இல்லா தினமாக (Non-vegetarian prevention) நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாள் கடைபிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் - சாது வாஸ்வானி!

இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியுடன் சுதந்திர போராட்டத்தில் தீவிர முனைப்புகாட்டிய எழுத்தாளராவார். “எல்லா உயிர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்துள்ளார் இவர். இதனால் இவர் பிறந்த தினமான நவம்பர் 25 ஐ இறைச்சி இல்லா நாள் மற்றும் விலங்குகள் உரிமைகள் தினமாக கடைபிடிக்கின்றனராம்.

உலக இறைச்சி இல்லா தினம்!
இடி முழுக்கத்தோடு அதிகாலையில் சென்னையை மிரட்டிய கனமழை... மழை எச்சரிக்கை எங்கெல்லாம் தொடர்கிறது?

1986 ஆம் ஆண்டு முதல் இந்த நாளில் சைவ உணவை ஊக்குவிக்கவும், சைவ வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், விலங்குகள் கொல்லப்படுவதை தடுத்து அவை காப்பாற்ற வழிவகுக்கவும் இறைச்சி இல்லா நாளுக்கான பிரசாரமானது தொடங்கப்பட்டது. அதாவது கோழி, வெள்ளை அல்லது சிவப்பு இறைச்சி, கடல் உணவு போன்று எந்தவித இறைச்சிகளையும் சாப்பிடாமல் சைவ உணவை சாப்பிடுவதற்கு இந்த நாள் ஊக்குவிக்கிறது. உலக அளவில் சைவ உணவை அதிகம் உட்கொள்வோர் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை என்பதும் அதற்கு முக்கியமான ஒரு காரணம்.

சைவம், அசைவம் இரண்டு விதமான உணவு முறைகளில் உள்ள பலன்களை கீழே விரிவாக பார்க்கலாம். அதற்கு முன்பு உணவு சமநிலை குறித்த புரிதல் மிகவும் அவசியமாகிறது. இந்தியாவில் சுமார் 20 % பேர் சைவ உணவும், சுமார் 80 % பேர் அசை உணவும் உண்கின்றனர். காட்டுமிராண்டி காலத்தில் இருந்து சமூகமாக வாழத் தொடங்கி விவசாயம் செய்து உணவு உற்பத்தியில் ஈடுபட்ட காலம் தொட்டு நவீன காலம் வரை உணவு வழக்கம் என்பது பல மாற்றங்களை அடைந்து கொண்டே வருகிறது. எந்தவொரு விஷயத்தை அதன் அறிவியல் தன்மையில் வைத்தும், சமூகவியலாக அதன் வரலாற்றுத் தேவையை முன்வைத்து பரிசோதித்து பார்க்க வேண்டுமே தவிர நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. ஆனால், இன்ன உணவு சாப்பிடுபவர்கள் இந்த குணத்தை உடையவர்களாக இருப்பார்கள் என்று வரையறுத்துக் கொள்வது என்பது தான் ஆபத்தானதாக இருக்கிறது. அதுவும் அசைவ உணவு உண்பவர்களுக்குள்ளேயே பலவித முரண்பாடுகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. உணவு என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை சம்பந்தப்பட்டது. அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி. உணவின் தேவை என்பது விலங்குகளையும், கடல் உயிரினங்களையும் பெரும்பாலும் சார்ந்து இருக்கும் சூழல் என்பதே இங்கு நிதர்சனம். இந்த உணவு முறைய பின்பற்றலாம் இதில் நல்ல விஷயங்கள் என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. இருப்பினும், உணவின் நன்மைகள் குறித்த புரிதலோடு அதனை அணுக வேண்டும்.

இறைச்சிக்கு மாற்றாக சொல்லப்படும் உணவுகள்?

இறைச்சிக்கு மாற்றாக சோயா சார்ந்த பொருட்கள், பலாப்பழம், கோதுமை, பருப்பு போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இறைச்சி விரும்பும் ஒருவர் எதற்காக இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கேள்வி இறைச்சி பிரியர்களிடையே எழுகிறது. ஏனெனில் ஒவ்வொரு சத்தும், ஒவ்வொரு உணவில் ஒவ்வொரு அளவில் இருக்கும். அப்படியிருக்க, இறைச்சிக்கு முழு மாற்றாக சைவ உணவை சொல்வது, முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது.

இறைச்சியில் உள்ள நன்மைகள்:

இறைச்சியில் உள்ள சில கொழுப்புச்சத்துகளை குறிப்பிட்டு, அதில் தீமை உள்ளதென சிலர் சொல்வதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. இறைச்சியில் உடலுக்கு நன்மைதரக்கூடிய சத்துகள் பல உள்ளன. புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, தாதுக்கள் சத்துக்களின் உள்ளடக்கமும் இதில் அடங்கியுள்ளது.

இறைச்சியில் உள்ள நன்மைகள்:
இறைச்சியில் உள்ள நன்மைகள்:

புரதம்: உடலின் சீரான இயக்கத்திற்கு காரணமாக இருப்பது புரதம். இது தாவரங்களை காட்டிலும் அசைவ உணவுகளில் அதிக அளவு உள்ளது. அவற்றில் அனைத்து வகையான அமினோ அமிலங்களும் உள்ளது. புரதத்தின் அளவு குறைந்தால் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்னைகளும், மேலும் குழந்தைகளுக்கு இவற்றின் பற்றாக்குறையால் வளர்ச்சியும் தடைப்படும், வளர்சிதை மாற்ற விகிதமும் பாதிப்புக்குள்ளாகும்.

இரும்புச் சத்து: இதன் பற்றாக்குறை ரத்த சோகையை ஏற்படுத்தும். இவை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவும். மூளையின் செயல்பாட்டுக்கு அவசியம்.

கால்சியம்: இவை பற்கள் போன்ற எலும்பு கட்டமைப்பின் முதன்மை கூறுகள். சைவ உணவை விட அதிக கால்சியம் அசைவ உணவில் உள்ளது. மேலும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, தாதுக்கள் போன்றவற்றின் உள்ளடக்கம் என்று அதிக அளவு இருக்கிறது.

எனவே அசைவ உணவு விரும்பிகள், மாற வேண்டுமென்றோ, சைவமே சிறந்தது என்றோ மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.

சைவ உணவு:

புரதம் - நார்ச்சத்து ஆகியவைதான் உடலின் செரிமானத்திற்கு தேவையான ஒன்று இவை ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பச்சைப்பட்டாணி, கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் பழங்களிலிருந்து கிடைக்கும். சைவ உணவிலும், எல்லா வகை சத்துகளும் இருக்கும்.

இருப்பினும் சைவத்தை மட்டுமே உண்பவர்களுக்கு எல்லா சத்துகளும் சென்று சேருமா? என்ற கேள்வி அநேக பேருக்கு உண்டு.

சைவ உணவு:
சைவ உணவு:

உணவு சமநிலை மற்றும் உணவு சங்கிலி: 

உணவு சமநிலை: இவ்விடத்தில்தான் உணவு சமநிலை என்பது பேசப்பட வேண்டிய ஒன்று. எந்த உணவு வகையையும் சமநிலையிலும் சம அளவிலும் எடுத்து கொள்வது சிறந்தது. அது காய்கறியாக இருந்தாலும் சரி இறைச்சியாக இருந்தாலும் சரி.

உணவு சங்கிலி: இவ்விடத்தில் மேலும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது உணவுச்சங்கிலி... இந்த சங்கிலில் ஏற்படும் சிறு தடுமாற்றம் கூட உயிர்களில் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். (எ.கா) பாம்புகளின் உணவாக தவளை இருக்க, இது இதனை உண்பதை நிறுத்திவிட்டால், தவளைகளின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும். இது உணவுச் சங்கிலியின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்

பசி என்னும் பிரதான உணர்வு:

பசி என்னும் பிரதான உணர்வுக்குகாகத்தான் மனிதர்களாகிய நாம் இங்கு கால்களின் சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஓடுகிறோம். பல சமுதாயத்தையும், பல நாடுகளின் கலாசாரத்தினையும் பிரதிபலிப்பதே உணவு முறைதான்.

மேலும் உணவில் ஏற்றத்தாழ்வும், தீண்டாமை கொடுமையும், அரசியலும் இருக்கிறது என்று வரலாறு நமக்கு சொல்கிறது. வாழ்வதற்கு அடிப்படையானவற்றுள் உணவு என்பது இன்றியமையாதது. அதை உண்பவர் அவரின் விருப்பத்திற்கும், பொருளாதார நிலைக்கும் ஏற்றவாறுதான் உணவை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் எங்கிருந்து ஏற்றதாழ்வும், தீண்டாமையும் பிறக்கிறது.

பணம் படைத்தவர்களிடம் தான் நினைத்ததை வாங்குவதற்கு வல்லமையுள்ளது என்றால் தனக்கு கிடைத்ததை உண்பதில் எங்கிருந்து பிழை பிறக்கிறது.

வாசனை, துர்நாற்றம் இதற்கெல்லாம் வரையறை வைத்தது யார்? கடற்கரை ஒரம் விற்பனை செய்யப்படும் மீன், இறா போன்றவற்றில் ஏற்படுவது தகாத மனம் எனில் அதையே பிரம்மாண்டமான மால்களில் கண்கவரும்வண்ணம் வைத்தால் அங்கு வரவில்லையா தகாத மனம்?

உணவு உட்கொள்வது என்பது அவர் தேவையையும் பல காரணங்களையும் உள்ளடக்கிதான் உள்ளது. இதைதான் உண்ணவேண்டும் என்பதற்கு பதிலாக இதையும் உண்ணலாம் என்பது நலமே. எனவே உணவு சமநிலை என்பது முக்கியமான ஒன்று. வெறுப்பு, விருப்பு என்பது அவரர் கருத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com