நொய்டாவைச் சேர்ந்த பயனர் ஒருவர், தன்னுடைய ஒன்பிளஸ் 8 ப்ரோ, மொபைல் போன் வெடித்துவிட்டதாக reddit தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “மதர்போர்டில் அழுத்தம் கொடுத்ததால் மொபைல் வெடித்திருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும், சார்ஜிலேயே இல்லாதபோது மொபைல் எப்படி வெடிக்கும்” என அந்தப் பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், ”இந்த விபத்து நடந்துபோது 1 அடி தூரத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன். அதனால் என் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதுகுறித்து ஒன்பிளஸ் டீமில் இருந்து எனக்கு யாராவது உதவுவார்கள் என்று நம்புகிறேன். ஆதாரமற்ற காரணங்களைச் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, தயவுசெய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா” என அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதற்கு ஒன்பிளஸ் தரப்பில், ”நீங்கள் எங்குள்ளீர்? உங்களுடைய ரூமின் வெப்பநிலை எந்த அளவுக்கு இருந்தது? ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தா” எனக் கேட்டுள்ளது. அதற்கு அந்தப் பயனர், “இந்தியாவில் நொய்டாவில் வசிக்கிறேன். என் அறையில் சாதாரண வெப்பநிலையில்தான் உறங்கிக் கொண்டிருந்தேன்” எனப் பதிலளித்தார்.
வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்.. https://www.reddit.com/user/itsmeshailesh/
ஒன்பிளஸ் மொபைல் வெடித்த சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான கவுரவ் குலாதி என்பவர், தாம் புதிதாக வாங்கியிருந்த ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதாக புகைப்படத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.