“அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வுக்கு செல்லமாட்டோம்”- உ.பி. சன்னி வக்ஃபு தலைவர்

“அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வுக்கு செல்லமாட்டோம்”- உ.பி. சன்னி வக்ஃபு தலைவர்
“அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வுக்கு செல்லமாட்டோம்”- உ.பி. சன்னி வக்ஃபு தலைவர்
Published on

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மறுசீராய்வு செய்யமாட்டோம் என்று உ.பி. சன்னி  வக்ஃபு வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் தலைவர் சுஃபர் ஃபரூகி சார்பில் ஒரு செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்தின் தலைவராக ஒரு விஷயத்தை நான் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். அதாவது உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுவை நாங்கள் தாக்கல் செய்ய மாட்டோம்.

இது தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கறிஞர் அல்லது வேறு அமைப்புகள் யாராவது நாங்கள் மறுசீராய்வு செய்வோம் என்று கூறினால் அது எங்களுடைய கருத்து அல்ல. மேலும் 2010-ஆம் ஆண்டு அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com