“தனிப்பட்ட தேவைக்கு ராஜீவ் காந்தி கப்பலை பயன்படுத்தவில்லை” - முன்னாள் கடற்படை தளபதி

“தனிப்பட்ட தேவைக்கு ராஜீவ் காந்தி கப்பலை பயன்படுத்தவில்லை” - முன்னாள் கடற்படை தளபதி
“தனிப்பட்ட தேவைக்கு ராஜீவ் காந்தி கப்பலை பயன்படுத்தவில்லை” - முன்னாள் கடற்படை தளபதி
Published on

ராஜீவ் காந்தி தனது தனிப்பட்ட தேவைக்காக இந்திய கடற்படைக் கப்பலை பயன்படுத்தவில்லை என முன்னாள் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் விராட் போர் கப்பலை சொந்த கப்பலாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவமதித்தார் என்று விமர்சித்திருந்தார். அத்துடன் குடும்பத்துடன் 10 நாள் விடுமுறைக்காக அந்த கப்பலில் தான் பயணித்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார்.

பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வினோத் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “ராஜீவ் காந்தி அரசு ரீதியான பயணத்தை தான் விராட் போர் கப்பலில் மேற்கொண்டார். அவருடன் அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி துணைக்கு வந்திருந்தனர். அத்துடன் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர். வேறு யாரும் அந்தக் கப்பலில் செல்லவில்லை. மற்றபடி ராஜீவ் காந்தியின் மாமனார், மாமியார் சென்றனர் என்பதெல்லாம் தவறான தகவல். அரசியல் காரணத்திற்காக கடற்படை குறித்து இவ்வாறு பேசுவது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com