கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
Published on

கல்விக் கடன்களை ரத்து செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருந்தது. அதேசமயம் பொருளாதார மந்தநிலையால நாட்டில் வேலையின்மையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.எம்.ஐ.இ என்ற இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பின் தரவுகளின் படி  நாட்டில் தற்போது வேலையின்மை 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

வேலையின்மை காரணமாக, மாணவர்களின் கல்விக் கடனை மத்திய அரசு ரத்து செய்யும் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கல்விக் கடன் ரத்து தொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவையும் பரிசீலிக்கவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். அதில், “ 2016-17-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, நிலுவையிலுள்ள கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. 

அதாவது  இந்தத் தொகை 67,685.59 கோடியிலிருந்து 75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது. கல்விக் கடன்கள் மற்றும் அந்த மாணவர்களின் வேலை தொடர்பான தரவுகள் சரியாக இணைக்கப்படவில்லை. அத்துடன் கல்விக் கடன்களை வசூலிக்க வங்கிகள் சரியான அணுகுமுறையை கையாளவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கல்விக் கடன்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் தற்போது அரசிற்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com