“சொராபுதீன் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை, அவர்களே இறந்தனர்” - ராகுல்காந்தி

“சொராபுதீன் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை, அவர்களே இறந்தனர்” - ராகுல்காந்தி

“சொராபுதீன் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை, அவர்களே இறந்தனர்” - ராகுல்காந்தி
Published on

சொராபுதீன் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை, அவர்களாகவே இறந்தவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவினரை விமர்சித்துள்ளார்.

சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் 22 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பேசியுள்ள ராகுல் காந்தி, “யாரும் கொல்லவில்லை. ஹரேன் பாண்ட்யா, துளசிராம் பிரஜாபதி, நீதிபதி லோயா, பிரகாஷ் தோம்ரே, ஸ்ரீகாந்த் காண்டல்கர், கவுசர் பாய் மற்றும் சொராபுதீன் ஷேக் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை. அவர்களாகவே இறந்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, 2005ஆம் ஆண்டு நிகழ்ந்த சொராபுதீன் என்கவுன்டர் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது 2005ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் செய்யப்பட்டார். மோடியை கொலை செய்ய சதி என்ற சந்தேகத்தின் பேரில் என்கவுண்டர் செய்ததாக குஜராத் காவல்துறை கூறியது. சொராபுதீன் ஷேக் மனைவி மற்றும் அவரது நண்பர் துளசிராம் பிரஜாபதியையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். 

இவர்கள் மூவரும் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அமித் ஷா உள்ளிட்ட 16 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என தெரிவித்து அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. எஞ்சிய 22 பேர் மீது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரமில்லை என கூறி 22 பேரையும் மும்பை நீதிமன்றம் வழக்கில் இருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com