ஐ.டி. ஊழியர்களுக்கு எதற்கு தொழிற்சங்கம்?: இன்ஃபோசிஸின் முன்னாள் அதிகாரி

ஐ.டி. ஊழியர்களுக்கு எதற்கு தொழிற்சங்கம்?: இன்ஃபோசிஸின் முன்னாள் அதிகாரி
ஐ.டி. ஊழியர்களுக்கு எதற்கு தொழிற்சங்கம்?: இன்ஃபோசிஸின் முன்னாள் அதிகாரி
Published on

ஐ.டி. ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என இன்ஃபோசிஸின் முன்னாள் நிதித்துறை தலைமை அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால், ஐ.டி. துறைக்கு தொழிற்சங்கங்கள் தேவை இல்லை என இன்போசிஸ் நிறுவன முன்னாள் நிதித்துறை தலைமை அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.டி. துறையில் தற்போது சற்று தேக்கநிலை காணப்பட்டாலும், அது விரைவில் சீரடையும் என்றார். எப்போதெல்லாம் இத்தகைய தேக்கநிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் நுழைய முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். “ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தினாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் ஐ.டி. துறைதான் அதிக ஊதியத்துடன், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக வாய்ப்புகள் கொண்ட துறையாக இருக்கிறது” என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், இந்திய ஐ.டி. துறை கடந்த ஆண்டு 150 பில்லியன் டாலர்களை சம்பாதித்து, ஒற்றை இலக்க வளர்ச்சியை கண்டிருந்தாலும், அடுத்த ஆண்டு இது இரட்டை இலக்கமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com