கர்நாடகா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு பொது இடத்தில் மாஸ்க் இல்லாமல் இருந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மாஸ்க் அணிவதை மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சுகாதார அமைச்சரே மாஸ்க் அணியாமல் பொது இடத்தில் வலம் வந்த வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு கடை ஒன்றிற்குச் சென்று கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்டபோது அவர் மாஸ்க் அணியவில்லை. பலரும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது முதல்முறை இல்லை என்றும், ஜூன் 2ம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்த அமைச்சர், மாஸ்க் ஏதும் அணியாமல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கொரோனா விழிப்புணர்வு குறித்து மக்களிடம் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கூறியது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் வீடியோவை பதிவிட்டுள்ள பலரும் அமைச்சர்கள் மக்களுக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்