தனியார்மயமாக்கப்படும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில், தற்போது வழங்கப்படுவதைப்போல வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் தனியார் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.
நிர்வாகக் கட்டுப்பாட்டை அரசாங்கத்திடமிருந்து தனியார் உரிமையாளர்களுக்கு மாற்றுவதை நிர்வகிக்கும் இத்தகைய ஒப்பந்தங்கள், பணியாளர் நலன்களைப் போதுமான அளவில் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி செய்கிறது. ஆனால் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது விரும்பத்தக்கதாகவோ அல்லது சட்டப்பூர்வமாகவோ சாத்தியமில்லை எனவும் அரசு தெரிவித்திருக்கிறது.
சட்ட நிறுவனமான எல் அண்ட் எல் பார்ட்னர்ஸின் பங்குதாரர் வில்லியம் விவியன் ஜான் கூறுகையில், “ பங்குதாரர்களின் ஒப்பந்தம் என்பது ஒவ்வொரு பங்குதாரருக்கும் எந்த அளவிற்கு கட்டுப்பாடு இருக்கும் மற்றும் ஆளுகை முடிவுகள் எப்படி என்பது குறித்து பங்குதாரர்களிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை வகுக்கிறது. எதிர்கால வணிகத்தை நிர்வகிக்கும் ஒரு ஆவணமாக இருப்பதால், தற்போதுள்ள ஊழியர்கள் தொடர்பான விதிமுறைகளையும் அது விதிக்க முடியும்” என்றார். மேலும் "பிபிசிஎல் [பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்] விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் இடஒதுக்கீடு பிரச்னை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 23, 2021 அன்று, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவைக்கு மேற்கோள் காட்டி, இடஒதுக்கீடு கொள்கை அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அது ஒரு அரசாங்க நிறுவனமாக இருக்காது” எனத் தெரிவித்தார்
தொழிலாளர் சட்ட நிபுணரும், சட்ட ஆலோசனை நிறுவனமான அன்ஹாத் சட்டத்தின் நிறுவனருமான மனிஷி பதக் கூறுகையில், "மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடியினர் / உடல் ஊனமுற்றோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டாலும், அத்தகைய கொள்கை தற்போது தனியார் துறைக்கு பொருந்தாது. சில மாநிலங்கள் இப்போது தனியார் துறையில் இடஒதுக்கீடு அறிவித்துள்ளன, ஆனால் இவை வலுவான சட்ட சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்