கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பயணம் ரத்துக்கான படிவத்தைப் பூர்த்தி செய்து ஹஜ் கமிட்டி முகவரிக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்களுக்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஹஜ் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.