பக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை

பக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை
பக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை
Published on

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டரி-வாகாவில் இருநாடுகளின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடையே இனிப்பு பரிமாற்றும் எதுவும் செய்யப்படவில்லை.

நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இந்தப் பண்டிகையின் போது இந்தியா-பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான அட்டரி-வாகா எல்லை பகுதியில் பாதுகாப்பு படைவீரர்களிடையே இனிப்பு பரிமாறுவது வழக்கம். எனினும் இம்முறை பாதுகாப்பு படை வீரர்களிடையே இனிப்பு பறிமாறப்படவில்லை. 

இந்திய தரப்பிலிருந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடையே இனிப்பை பறிமாற விருப்பமாக இருந்தாலும் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். ஏற்கெனவே நேற்றே பாகிஸ்தான் படை வீரர்கள் இனிப்பு பரிமாற்றும் இருக்காது என்று தெரிவித்திருந்தனர். 

கடந்த ஜூன் மாதம் ரம்ஜான் பண்டிகையின் போது இருநாட்டு எல்லை படை வீரர்களும் இனிப்பு பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com