சத்தீஸ்கர்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு முறையான சத்துணவு இல்லை? அரசுக்கு எழும் கேள்வி

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைவு: சத்தீஸ்கர் அரசு மீது எழும் கேள்விகள்
மதிய உணவு
மதிய உணவுGoogle
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் அங்கன்வாடி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கு ஆதாரமாக வீடியோவும் வெளிவந்துள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்ப்பதுண்டு. காரணம் அங்கு போதிய ஊட்டச்சத்துகளுடன் கூடிய சத்துணவானது கொடுக்கப்படுவதுடன் நல்ல கல்வியும் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை. இதற்காக அரசாங்கமும் அங்கன்வாடிக்கு குறிப்பிட நிதியை ஒதுக்கி வருகின்றது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் 52,000 அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு தரப்படும் உணவில் காய்கறியோ, பருப்பு வகைகளோ இல்லாமல் வெறும் சாதத்தில் மஞ்சள் கலந்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் சத்தீஸ்கரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் லக்ஷ்மி ராஜ்வாடே, இதை மறுத்துள்ளார்.

பிற மாநிலங்களில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் சத்தீஸ்கர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவு தொடர்ந்து விநியோகம் செய்து வருவதாகக் கூறுகிறார்.

கூகுள்

ஆனால் பிரபல பத்திரிகை, பிஜகுரா கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் பயிலும் கிட்டத்தட்ட 43 குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவினை ஆதாரத்துடன் படம் பிடித்துள்ளது. அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலந்த சாதம் மட்டுமே காணப்படுகிறது. அதில் காய்கறிகளோ அல்லது பருப்பு வகைகளோ காணப்படவில்லை.

இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது , அவர்கள், கடந்த ஒரு வார காலமாக வெறும் சாதத்தை மட்டுமே அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுத்ததாக உண்மையை ஒப்புக்கொண்டனர். இது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவு
"மோடி மீண்டும் தேர்வானது ஒரு விபத்தல்ல; அவரது பல ஆண்டு உழைப்பின் பலன்" - புகழ்ந்து தள்ளிய புதின்!

இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியபோது, " மதிய உணவு சப்ளையர்கள் சரியாக காய்கறிகள், பருப்புகளை வழங்காததால், குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்கப்படவில்லை “ என்றார். உணவு சப்ளையர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர்களுக்கு நிலுவைத்தொகை வழங்காததால், சப்ளை நிறுத்தப்பட்டதாக கூறினர். இதேபோல காய்கறி சப்ளையர்களும் கூறுகின்றனர்.

ஆக... தங்களுக்கு உரிய தொகை கிடைக்காததால் மளிகை பொருட்களையும், காய்கறிகளையும் நிறுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தைகளுக்கு, அரசு விதித்துள்ள சரிவிகித உணவு பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது

ஒவ்வொரு மாநிலத்தின் கல்வித்துறையானது இந்தெந்த கிழமைகளில் இந்த உணவு என்று மதிய உணவுக்கான மெனுவை கொண்டிருக்கும். ஆனால் இம்மாநிலத்தில் அந்த மெனுவானது வெறும் காகிதத்துடன் காணப்படுகிறது. குழந்தைகளின் உணவில் இல்லை என்ற சோகம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com