பள்ளி கேண்டீன்களில் என்னென்ன உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம், எதனை விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை பட்டியலிட்டிருப்பதைப் தெரிந்து கொள்வோம்.
அதில் அதிக காரம், அதிக கொழுப்புள்ள உணவு, அதிக உப்பு அல்லது அதிக இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது என்பதால் அவற்றை பள்ளி கேண்டீன்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தானியங்கள், பருப்பு வகைகள், பால் சார்ந்த பொருட்கள், முட்டை, மீன், கறி, பழங்கள், காய்கறிகள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை பள்ளி வளாகத்தில் உள்ள கேண்டீனில் விற்பனை செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது.
எண்ணெயில் அதிக நேரம் சமைக்கப்படும் உணவுகளான பிரென்ச் பிரைஸ், சிப்ஸ், சமோசா, சோளா படுரா, குலாப் ஜாமுன் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோலா போன்ற காற்று ஏற்றப்பட்ட குளிர் பானங்கள், துரித உணவுகளான நூடுல்ஸ், பீட்சா, பர்கர் போன்ற உணவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.