சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை: கர்நாடக உள்துறை அமைச்சர்

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை: கர்நாடக உள்துறை அமைச்சர்
சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை: கர்நாடக உள்துறை அமைச்சர்
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மற்ற கைதிகளைப் போன்றே சசிகலாவும் நடத்தப்படுவதாகக் கூறினார். சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தான் சென்று அதை உறுதி செய்ததாகவும் உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார். கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபா அறிக்கை சமர்ப்பித்த நிலையில், கர்நாடக அமைச்சரின் இந்தக் கூற்று வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com