பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கதை முடிந்துவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் சாடியுள்ளார்.
கால்நடைத் தீவனம் ஊழல் வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கதை முடிந்துவிட்டதாக கூறினார். அத்துடன் பீகார் முழுவதும் கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுவதாகவும், இந்த வேலையை பாஜக கனகச்சிதமாக செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பீகார் பின்நோக்கிக் சென்று கொண்டிருப்பதாகவும் லாலு விமர்சித்தார்.