இந்தியாவில் முதல்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றம் வந்த நிதின் கட்கரி!

இந்தியாவில் முதல்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றம் வந்த நிதின் கட்கரி!
இந்தியாவில் முதல்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றம் வந்த நிதின் கட்கரி!
Published on

நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் காரில் இன்று நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் காரில் இன்று நாடாளுமன்றத்திற்கு சென்றார். இந்த காரில் அமைச்சர் நிதி கட்கர் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பாராளுமன்றம் வரை பயணித்தார். ஹைட்ரஜனில் இயங்கும் காரில் ஒருவர் பயணிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும், மேலும் “இதுதான் இந்தியாவின் எதிர்காலம்” என்று கட்காரி பாராட்டினார்.

ஹைட்ரஜனில் மூன்று வகைகள் உள்ளன. நிதின் கட்கரி பயன்படுத்திய கார் பச்சை ஹைட்ரஜன் மூலம் இயங்கக் கூடியது. அதன் விலை ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 1.5 இருக்கும். அதன் ஜப்பானிய பெயர் “மிராய்” என்று விளக்கினார். ஹைட்ரஜன் காரே இந்தியாவின் எதிர்காலம் என்று பிரதமர் மோடியும் குறிப்பிட்டுள்ளார். “இது சுயசார்பு இந்தியாவாக மாறுவதற்கான ஒரு பெரிய படியாகும். பெட்ரோல் மற்றும் டீசல் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. ஆனால் ஹைட்ரோபியூல் செல் கார்கள் மாசுபாட்டை ஏற்படுத்தாது” என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் அடிப்படையிலான மேம்பட்ட எரிபொருள் செல் மின்சார வாகனமான டொயோட்டா மிராய்யை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார். "பசுமை ஹைட்ரஜன் - இந்தியாவை 'எரிசக்தி சுயசார்புடையதாக' மாற்றுவதற்கான திறமையான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான ஆற்றல் பாதை" என்று கட்கரி ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com