வாகனங்களை வாங்குவதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஆட்டோ மொபை துறை சரிவை சந்திக்க புதிய காரணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது வாகனங்களை வாங்க வேண்டும் என்பதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் எனத் தெரிவித்துள்ளார்.