நடப்பு நிதியாண்டில் கொரோனா தொற்று சூழ்நிலையால் ரூ.2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காணோளிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்று சூழ்நிலையால் ஜிஎஸ்டி வரி வருவாய் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறினார். கடவுளின் செயலால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு பிறக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நடப்பு நிதியாண்டில் ரூ.2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று காலத்தில் வெறும் ரூ.97 ஆயிரம் கோடி மட்டுமே ஜிஎஸ்டி மூலம் வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வரி இழப்பு தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் விரைவில் ஜிஎஸ்டி தொகையை விரைவாக மாநிலங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.