இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | “1 கோடி குடும்பங்கள் பயன்பெறும்..” - நிர்மலா சீதாராமன்

மத்திய இடைக்கால பட்ஜெட்டை ஒட்டி நிர்மலா சீதாரமன் உரையை வாசித்தார்.
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்புதிய தலைமுறை
Published on

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்ற மக்களவை கூடிய நிலையில் அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து தொடர்சியாக 6 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்
6 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024-2025புதிய தலைமுறை

இதற்கான உரையை தொடங்கிய அவர், “விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண்கள் உயிர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை இந்திய கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 78 லட்சம் தெருவோர வியாபாரிகள் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர். பிரதான் மத்திரி காப்பீடு மூலம் 4 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்
🔴 LIVE | இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | 58 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தார் நிர்மலா சீதாராமன்!

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.

ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்
ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்

கோவிட் காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், பிரதமரின் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்த வண்ணம் இருந்தது. தற்போது 3 கோடி வீடுகள் எனும் இலக்கை எட்டியுள்ளோம். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் என்ற இலக்கு எட்டப்படும்.

பல்வேறு துறைகளின் கீழ் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க எங்கள் அரசு திட்டமிட்டுள்ளது. அதில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்க இதற்காக ஒரு குழு அமைக்கப்படும்.

roof-top solarisation மூலம் 1 கோடி குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற இயலும். அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் வரலாற்று சிறப்புமிக்க நாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com