“படைப்பாற்றல் மிக்கவர் சாயாதேவி” - நிர்மலா சீதாராமன் அஞ்சலி 

“படைப்பாற்றல் மிக்கவர் சாயாதேவி” - நிர்மலா சீதாராமன் அஞ்சலி 
“படைப்பாற்றல் மிக்கவர் சாயாதேவி” - நிர்மலா சீதாராமன் அஞ்சலி 
Published on

தெலுங்கு மொழியின் முன்னணி பெண் எழுத்தாளர் அப்புரி சாயாதேவி மறைந்ததற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தெலுங்கு மொழியில் முன்னணி பெண் எழுத்தாளர் அப்புரி சாயாதேவி. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் 2005ஆம் ஆண்டு ‘தானா மார்கம்’ என்ற நூலுக்காக கேந்திரிய சாகித்ய அகடாமி விருது பெற்றார். இந்த நூலில் இவர் நடுதர குடும்ப பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்து எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஹைதராபாத்திலுள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் இவர் காலமானார். 

இந்நிலையில் இவரின் மறைவுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாயாதேவி அவர்களிடமிருந்து நான் நிறையே கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர். நிறைய விஷயங்கள் குறித்து சிந்திப்பவர். நன்றாக சமையல் செய்ய தெரிந்தவர். படைப்பாற்றல் மிக்கவர். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com