பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் பயணமாக நாளை பிரான்ஸ் புறப்படுகிறார்.
பிரான்சிலிலிருந்து ரஃபேல் போர் விமானம் வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த பயணம் அமைந்துள்ளது. இ்ப்பயணத்தின் போது பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், நிர்மலா சீதாராமன் கேட்டறிய உள்ளார். இரு நாடுகளும் இணைந்து போர் தளவாடங்களை தயாரிப்பது குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்படும் எனத்தெரிகிறது.