“வேளாண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி”- நிர்மலா சீதாராமன்

“வேளாண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி”- நிர்மலா சீதாராமன்
“வேளாண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி”- நிர்மலா சீதாராமன்
Published on

வேளாண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’மாநிலங்களுக்கிடையே விளைபொருட்களை விற்றல் முறைகள் மத்திய அரசிடம்தான் உள்ளது. வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை. உற்பத்தி செய்பவரிடம் மட்டும்தான் விற்பனைக்கான சுதந்திரம் இருக்கிறது.

எனவே தங்களின் விளை பொருட்களை விற்பது பற்றி விவசாயிகளே தீர்மானிக்கலாம். ஆதாயம் கிடைக்கக்கூடிய வகையில் எங்குவேண்டுமானாலும் விளைபொருட்களை விற்கலாம்.

அதேபோல் விவசாயிகள்மீது விதிக்கப்பட்டிருந்த 8.5% வரி இனிமேல் இருக்காது. தற்போது எவ்வளவு விலைக்கு யாரிடம் விற்பது என்று விவசாயிகளே முடிவு செய்யலாம். மேலும், விற்கும் பொருட்களுக்கான பணத்தின் ரசீதை உடனே கொடுக்கவேண்டும். விளைபொருட்களை பெற்றவுடன் ரசீதும், 3இல் 2 பங்கு தொகையையும் உடனே வழங்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com