நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான முகேஷூம், வினய்யும் தங்களது இறுதி ஆசைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில், ஓடும் பேருந்தில் 23 வயதான இளம் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நால்வரையும் இன்று அதிகாலை தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. அதன்படி நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே நாம் நாளை தூக்கிலிடப்பட போகிறோம் என்ற செய்த செய்தியை அறிந்த அவர்கள் நேற்று கவலையாலும், பயத்தாலும் துடித்துள்ளனர். மேலும் வழக்கமாக மாலை வேளைகளில் அவர்கள் அருந்தும் தேநீரையும் அருந்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தூக்குத் தண்டனை குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் கைதிகள் மிகவும் பதட்டமாக இருந்தனர் என்றும் அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்திக்கொண்டனர் என்றும் கூறினார்.
மேலும் அவர்களிடம் உங்களது கடைசி ஆசை என்ன என்று கேட்டதற்கு “ நான் இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன் என்று முகேஷ் கூறியதாகவும், நான் சிறையில் வரைந்த ஓவியங்களை சிறை கண்காணிப்பாளருக்கு வழங்க விரும்புவதாக வினய் கூறியதாகவும் தெரிகிறது. அதில் 'Hanuman Chalisa ஒவியத்தின் பிரதியை தனது குடும்பத்திற்கு வழங்க வினய் விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.