நிர்பயா வழக்கு : குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் சீராய்வு மனு

நிர்பயா வழக்கு : குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் சீராய்வு மனு
நிர்பயா வழக்கு : குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் சீராய்வு மனு
Published on

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குற்றவாளிகளில் ஒருவர் புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ‌மாணவி ஓடும் பேரு‌ந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, ‌வி‌னய் கு‌மார் சர்மா, அ‌க்ஷய் குமார் ‌ஆகியோருக்கு தூக்குத் ‌தண்டனை விதிக்கப்பட்டது. இதில், பவன்குப்தா தவிர மற்ற மூவரும் தாக்கல் செய்‌‌த, கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிரா‌கரித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை பவன்குமார் குப்தா தாக்கல் செய்‌த‌ கருணை மனு‌வையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டாலும், நால்‌வரை தூக்கி‌லிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தங்களது கருணை மனுக்களை நிராக‌ரித்ததை எதிர்த்து, முகேஷ் குமார் சிங், வினய் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற‌ம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தூக்குத் தண்டனையை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், தனக்கு தூக்குத் தண்டனை தொடர்பாக கருணை மனு அளிக்கவும், இதுதொடர்பாக ஜூலை 2021 வரை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com