கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பிற்கு வவ்வால்கள் காரணம் அல்ல என்று போபால் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கேரளாவில் பீதி இன்னும் அதிகரித்துள்ளது.
கேரளாவில் நி்ஃபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கோழிக்கோடு அருகே சேராம்பை பகுதியில் முதன்முதலாக நிஃபா வைரஸ் பாதிப்பிற்குள்ளான குடும்பம் வசிக்கும் வீட்டருகே, உள்ள கிணற்றில் இருந்த வவ்வால்களின் ரத்த மாதிரிகள் போபாலில் உள்ள "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸ்" ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
வவ்வாலின் ரத்த மாதிரிகள் மூன்று, பன்றியின் எட்டு, மாட்டின் ஐந்து, ஆட்டின் ஐந்து என 21 ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் எதிலும் நிஃபா வைரஸ் இல்லை என போபால் இன்ஸ்டிடியூட் இயக்குனர் வி.பி.சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸ் பரப்புவது வவ்வால்கள், ஆடு, மாடு மற்றும் பன்றிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டாலும், வைரஸ் பரவுவது எதனால் என்று தெரியாததால் கேரள மக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.