நிபா வைரஸ் எதிரொலி; புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்

நிபா வைரஸ் எதிரொலி புதுச்சேரி மாஹே மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரிpt web
Published on

நிபா வைரஸ் எதிரொலி புதுச்சேரி மாஹே மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ்
நிபா வைரஸ்PT

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதையொட்டியுள்ள எல்லைப்பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும் என்ற காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வரவேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்க்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருபவர்களை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் விபரங்களை சேகரித்து அதை கண்காணிக்க வேண்டும். இந்த நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அனைத்து துறையினரும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாஹே மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com